சென்னை:
பிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

16வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒரு பகுதியாக வருகிற 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுன்டர்களிலும் நேரடியாக பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகாலையில் கூட்டம் அதிகமாக வந்து விடுவதால் இரவு நேரமே வந்து காத்திருந்து டிக்கெட்டை விலை கொடுத்து வாங்கி செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு படையெடுத்தனர்.