சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 5 நாட்கள் தொடர் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், இன்று மாலை திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில்,  தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதுதொடர்பாக  திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 15ஆம் தேதி கலைஞர் பிறந்த மண், திருவாரூர் தெற்கு ரத வீதியில், திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்குகிறார் என கூறப்பட்டுள்ளது.
நாளை 16ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அறந்தாங்கி, ஆலங்குடி, வீரபாண்டி, ஏற்காடு, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருசெங்கோடு பகுதிகளில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
நாளை மறுதினம் (17ந்தேதி – புதன்கிழமை)  நத்தம், வேடசந்தூர், மதுரை, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதி பகுதிகளில் ஓட்டு வேட்டையாடுகிறார். அன்று மாலை, 5.30 மணி அளவில், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருப்பெரும்புதூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறர்.
18ந்தேதி (வியாழக்கிழமை) காலை கும்முடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளுர் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். பிற்பகல் திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் வாக்கு வேட்டையாடுகிறார்.
19ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை ஒரத்தநாடு, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி,  மாலை,  திருப்பூர் தெற்கு, அவிநாசி, திருப்பூர். வடக்கு, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலுர்  பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.