எனக்கு ஏதாவது ஆனாத்தான் ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி

Must read

a
இயற்கையாக தனக்கு ஏதாவது நேர்ந்தால் தான் ஸ்டாலின் தமிழக முதல்வராவார் என தி.மு.க., தலைவர் கருணாநிதி  தெரிவித்துள்ளார்.
தனியார்  தொலைக்காட்சிக்கு  கருணாநிதி அளித்துள்ள பேட்டியில்  கூறியதாவது:
“நான்  ஆறாவது  முறையாக முதல்வராகி சாதனை படைக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் ஆசைப்படுகிறார்.  தான் முதல்வராக வேண்டும் என்று  அவர் நினைத்ததே இல்லை.
இது வரை  தேர்தலில் நான் தோற்றதில்லை. இந்த முறையும் வென்றால், நான் ஆறாவது முறையாக முதல்வர் பதவி ஏற்க வேண்டும் என நினைக்கும் முதல் ஆள் ஸ்டாலின் தான். எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால் தான் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார்” – இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

More articles

Latest article