மனோகர் லால் கத்தார்

இந்தியாவின் தலைநகர் தில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை ஏற்கனவே வெற்றிகரமாக அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்த பாஜகவினர், தற்பொழுது அடுத்த குறியாக அக்பர் சாலையின் பெயரை மாற்ற களத்தில் குதித்துள்ளனர்.
மோடியின் போலி படிப்புச் சான்றிதழ் விவகாரம், உத்தரகாண்டில் ஜனாதிபதி  ஆட்சியை அமல் படுத்தியதில் பின்னடைவு, ஹரியானாவில் ஜாட் இனத்தவர் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்,  விஜய் மல்லையா தப்பியது,  பதங்கோட் விசாரணையில் பாகிஸ்தானிடம் மண்டியிட்டது , ஓய்வூதிய வட்டி விகிதம், மகாராஸ்திராவில் விவசாயிகள் வறட்சியின் காரணமாக தற்கொலை என தொடர்  சறுக்கல்களை சந்தித்து வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பும் வேலைகளில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தற்பொழுது ஹரியானா முதல்வர் தம்முடைய செயலின்மையை மறைக்க இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் , வெளியுறவுத் துறை இணைஅமைச்சர் வீ.கே.சிங்கிடம் தில்லியில் உள்ள அக்பர் சாலையை மகாரானா பிரதாப் சிங் பெயரில் மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுத் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை விரிவுப் படுத்தும் விதமாக ஹரியானா முதல்வர் ஏற்கனவே இந்து மதக் கோட்பாடுகளை மாநில அரசின் பாடப் புத்தகங்களில் திணித்துள்ளார்.இந்து மத அடிப்படைவாதிகளால் 1947 முதலே முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்களுக் கெதிரான துவேசத் தீ அணைக்கப்பட்டுவிடாமல் தொடர்ந்து வளர்க்கப் படட்டு  வருகின்றது. மத்தியில் மோடி ஆட்சி அமைத்ததில் இருந்து தொடர்ந்த்து மதவாதத்தை திட்டமிட்டு வளர்த்து வருகின்றனர். ஜே.என்.யூ, ஹைதரபாத், ஜாதவ்பூர் பல்கலைகழகங்களில் ஏ.பி.வீ.பியினர் மூலம் கல்வி வளாங்கங்களை காவிமயமாக்கி மதமோதலை  ஸ்மிருதி இராணியின் துணையோடு தூண்டி வருகின்றனர் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தான் ஹரியானா முதல்வரின் இந்த கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

இவரது கோரிக்கையை தாம் வழிமொழிவதாக சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். தில்லியில் உள்ள 33 சத சாலைகள் இந்தியாவை படையெடுத்து ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களின் பெயரில் உள்ளன. எனவே இதனை மாற்ற வேண்டும். மகாரானா பிரதாப் சிங் அக்பரிடம் சரணடையாமல் வீரமுடன் தியாகம் செய்ததை நினைவு கூறும் வகையில் , அக்பர் சாலையை மகாரானா பிரதாப் சிங் சாலை என பெயர்மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.