சென்னை:
தோல் மற்றும் காலணிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் திண்டிவனம் அருகே புதிய காலனி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு என தோல் மற்றும் காலணி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் பல காலனி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வ காட்டி வருகின்றன எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தோல் மற்றும் காலணிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதால் காலணி துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்க கொள்கை வெளியிடப்படுகிறது. காலணி மற்றும் விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் காலணிச் சந்தையை கைப்பற்ற தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.