ஸ்டாலின்.. எடப்பாடி.. ஸ்டெர்லைட்..

Must read

நெட்டிசன்
-ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
பாட்ஷா படத்தில் வில்லன் தேவன் வீட்டில் ஒரு சீன் வரும்.. அதில் ஒரு அடியால் தேவனிடம் சொல்லுவார்.
“சார், வைரத்தை வாங்கினப்போ ஈவினிங் அஞ்சு மணிக்கு பணத்தோட நம்மள சந்திக்கிறேன்னு சொன்னவங்க மூணு மணி பிளைட்டுக்கே டிக்கெட் போட்டிருக்காங்க”
இப்போது இந்த டயலாக் தான் ஞாபகத்திற்கு வந்து போகிறது.
போன வருஷம் கொரோனா உக்கிரமாக ஆரம்பித்தபோதே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதவர் எடப்பாடி. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்க அவர் என்ன மருத்துவ நிபுணரா என்றெல்லாம் கூட கிண்டல் பேச்சுகள் எழுந்தன.
இப்போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திட்டமிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி அதில் ஸ்டாலின் அண்ட் கோவை இழுத்துப்போட்டு அவர்கள் மட்டுமே ஆலையை திறக்க சொல்வதுபோல் சித்திரத்தை வரைந்து சிக்கலில் மாட்ட வைத்துவிட்டார் எடப்பாடி ..
திமுக தலைவர் ஸ்டாலினாவது சுதாகரித்து இருக்க வேண்டும்.. எதற்குமே கூப்பிடாத எடப்பாடி இத்துனூண்டு ஸ்டெர்லைட் விவகாரத்திற்கு மட்டும் எதற்கு விழுந்து விழுந்த கூப்பிடுகிறார் என்று உஷாராகி இருக்க வேண்டும்.
நீங்களே சீரும் சிறப்புமாக வழக்கம்போல் திறமையுடன் முடிவெடுத்துக் கொள்ளுங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கலாம்..
அனுமதி தருவது என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டு எவ்வளவு நேக்கா கோர்த்துவிட்டு இருக்கிறார் பாருங்கள் எடப்பாடி..

More articles

Latest article