சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.

கடந்த 14ம் தேதி கொரோனாவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்புகிறார்.

இருப்பினும், மேலும் ஒரு வார காலத்திற்கு முதல்வர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.