சென்னை:
மிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்திக்குறிப்பு:தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யும். பல நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.