சென்னை:
சிஎஸ்ஐஆர் இயக்குனரான் நல்லதம்பி கலைச்செல்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான @CSIR_IND -இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்! தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று! என்று குறிப்பிட்டுள்ளார்.