சென்னை: கே.பி.பார்க் வீட்டில் குடியேற ஒவ்வொரு வீட்டினரும், ரூ.ஒன்றரை லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணையை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.  இதையடுத்து, சமூக வலைதளங்களில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.
சென்னை புளியந்தோப்பில் உள்ள கேசவபிள்ளை பார்க் (கே.பி.பார்க்) அடுக்குமாடி குடியிருப்பு குடிசை மாற்று வாரிய நிதியில் கட்டி முடிக்கப் பட்டது.  தமிழ்நாடு அரசின் நிதியில் ஜூன் 2019 முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதை  மத்திய அரசின் அரசின் திட்டத்தை முந்தைய அதிமுக அரசு சேர்த்துவிட்டது
கட்டி முடிக்கப்பட்ட வீட்டினை மத்தியஅரசின் சாதனையாக காட்டிட, வீட்டின் ஒதுக்கீடு பெறுபவர்களிடம் ஒரு வீட்டிற்கு ரூபாய் ஒன்றரை லட்சம் பெற்று பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக இணைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போதைய அதிமுகஅரசு அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனால், வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் குடிசை மாற்று வாரியத்திடம் ரூ.ஒன்றரை லட்சம் செலுத்தி உள்ளனர்.
ஏற்கனவே இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், வீடு ஒதுக்கீடு பெற்றவர்களிடம் ரூபாய் ஒன்னரை லட்சம் வசூலிக் கக் கூடாது என்றும்,  கட்டி முடிக்கப்பட்ட வீட்டினை ஒப்படைக்காமல் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், கட்டிடம் தரமற்றதாக உள்ளது என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய திமுக அரசு, கே.பி.பார்க் குடியிருப்புகளில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய, கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டதுடன், இதுதொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தற்போது, கே.பி.பார்க் குடியிருப்புக்கு ரூ.ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும், ஏற்கனவே ஒன்றரை லட்சம் கொடுத்து வீடு ஒதுக்கீடு பெற்றவர்களிடம் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது ஆன்றோர் வாக்கு. அதை நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.