சென்னை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ராகுல் காந்திக்கு தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பலறும் பிறந்த நாள வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்பு சகோதரர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் ஜனநாயக பண்பைக் காப்பாற்ற நமக்கு நீண்ட பயணம் உள்ளது. ஒன்றாக அணிவகுப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் திமுக எம்.பி. கனிமொழியும் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை மீட்டெடுப்பதற்கும் நாம் நடத்தும் போராட்டத்திற்கு பெரும் நம்பிக்கையைத் தரும் பாசிசத்தை எதிர்த்துப் போராடும் அவரது பாதையில் அவருக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.