சென்னை: நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் தன் கடைமையை செய்யவில்லை என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் 2வது முறையாக இயற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து,,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் காலை 11 மணிக்கு  தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால்,   எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் கட்சிகள்  புறக்கணித்துள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி, பாமக, விசிக, மதிமுக உள்பட சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நீட் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள்:

1. திமுக – அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன்

2. காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை

3. அதிமுக – பங்கேற்கவில்லை

4. பாரதிய ஜனதா கட்சி – பங்கேற்கவில்லை

5. பாட்டாளி மக்கள் கட்சி – வெங்கடேஸ்வரன்

6. மதிமுக – டாக்டர்.ரகுராமன்

7. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – தளி ராமசந்திரன்

8. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – நாகை மாலி

9. விடுதலை சிறுத்தைகள் – சிந்தனைச் செல்வன்

10. மனிதநேய மக்கள் கட்சி – ஜவாஹிருல்லா

11. தமிழக வாழ்வுரிமைக் கட்சி – வேல்முருகன்

12. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – ஈஸ்வரன்

13. புரட்சி பாரதம் – பங்கேற்கவில்லை

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், . நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். ”ஒவ்வொரு மாநிலமும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என மத்திய உயர்கல்வித்துறை முன்னதாக கூறியது 2006-ல் நுழைவுத்தேர்வு தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்டு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளிப்படையானது என அப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியது. அதைத் தொடர்ந்து  நீட் நுழைவுத்தேர்வை ஒழிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஏற்கனவே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். மேலும், அதனை நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. பின்னர் அவை தடை செய்யப்பட்டது.

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளோம். இதனால்தான் நீட் விலக்கு மசோதா முன்னதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினேன் & விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நீட் விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதல் பெற அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.   ஆனால், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 144 நாட்கள் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பினார்.

அரசியலமைப்பு விதிப்படி தமிழக ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை. எனவே,சமூகநீதி போராட்டத்தை முன்னெடுக்கவே அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே கவர்னரை சந்தித்தேன். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தபோது, மெய்நிகர் சந்திப்பில் பிரதமரிடம் முறையிட்டேன்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது 8 கோடி மக்களின் கோரிக்கையாக மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை தெரிவிக்குமாறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரின் கருத்துக்களை கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.