தமிழ், தெலுங்கு, இந்தி என வலம் வரும் ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார் .பின்னர் எதோ கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து விட்டனர் .

காதல் முறிவுக்கு பிறகு ஸ்ருதி படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது ஆண் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் பதிவு இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகை ஸ்ருதிஹாசன் கெளஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகரை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது சாந்தனுவுடன் தான் இருக்கும் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஸ்ருதி ஹாசன், ”எனக்கு பிடித்த மனிதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், இன்று பிறந்ததற்கு நன்றி” எனத் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.