திருச்சி:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட, மாநகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.