சென்னை:
த்திய அரசு நம்மிடம் வழிப்பறி செய்து கொண்டிருக்கிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ஒன்றிய அரசு நம்மிடம் வழிப்பறி செய்து கொண்டிருக்கிறது என்றும், கல்வியை பொருளாதாரத்தை, உரிமைகளை பறித்து மாநிலங்களை அடக்கி விட துடிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள கேள்விகள்:

பெட்ரோல் டீசல் வரியை குறைக்காத்தால் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தமிழக அரசு இருப்பதாக கூறுகின்றனர். மொத்த மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு 20% பகிர்ந்து அளிக்காதது கூட்டாட்சி தத்துவமா?

எங்கள் பணத்தில் கட்டப்பட்ட மருத்துவ கல்லுரிகளில் உங்கள் தேர்வை எழுதிதான் படிக்க வேண்டும் என்று சொல்வது கூட்டாட்சி தத்துவமா?

10-ம் மானிய குழுவின் போது, தமிழகம் ரூ.1 வரியாக கொடுத்ததால், 60பைசா திரும்ப வரும். இன்று 35 பைசா தான் வருகிறது. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.