கொழும்பு:

லங்கையில் அந்நாட்டு விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்பிலவு பிலக் குடியிருப்பு மக்களின் நிலங்களை மக்களுக்கு திருப்பி அளிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நிலங்களை தங்களிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று மக்கள் கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் “விமானப்டையினர் வசம் இருக்கும் நிலங்கள்  நாளை காலை 11 மணியளவில் விடுவிக்கப்படும்”  என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் இருந்து, அந்த நிலங்களின் எல்லைகளை வரையறுக்கும் பணி துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து  தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின் போது படையினர் வசமிந்த குறித்த காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.