கலிபோர்னியா:

அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜிஸ் (ஸ்பேஸ் எக்ஸ்) நிறுவனம் விண்வெளி வாகன தயாரிப்புகளையும், விண்வெளி போக்குவரத்து சேவையையும் செய்து வருகிறது. இந்த நிறுவனம் நாசாவில் உருவாக்குதலோடு கட்டண அடிப்படையில் 2 வாடிக்கையாளரை அடுத்த ஆண்டு நிலாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது.

இதை அந்த நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி எலான் முஸ்க் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,‘‘ தனியார் நிதியுதவியுடன் முதல் முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் உள்ளவர்கள். அதோடு அடுத்தகட்டமாக யாரும் நம்பமுடியாத, அற்புதமான செயல் ஒன்றை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

சுற்றுலா செல்லும் அந்த இருவர் யார் என்ற விபரங்களை முஸ்க் கூறவில்லை. எவ்வளவு பணம் வசூல் செய்யப்படுகிறது என்பதையும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும்,‘‘ இருவரும் ஹாலிவுட் நடிகர்கள் இல்லை. நிலாவின் முதல் சுற்றுப் பயணத்தை நடத்த நாசா முடிவு செய்தால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்ப டும்’’ என்றார்.

நாசாவுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனது குழுவினரை அனுப்பியதன் மூலம் இந்த நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெற்றிக்கு பிறகு தான் தற்போது நிலாவுக்கு தனியார் சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்திடம் சொந்தமாக ஃபல்கான் கனகர ராக்கெட் உள்ளது. இதில் தான் சுற்றுலா பயண திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இந்த சுற்றுலா பயணிகள் பூமியில் இருந்து 3 முதல் 4 லட்சம் மைல் தூரம் வரை பயணிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.