கலிபோர்னியா,

னியார் நிறுவனமான ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு பொதுமக்களை சுற்றுலாவாக அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது.

இதற்கான குறிப்பிட்ட அளவு முன்வைப்பு தொகை செலுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்நிறுவன தலைமைசெயல் அதிகாரி எலான் மஸ்க் கூறி உள்ளார்.

இந்த திட்டம் 2018ம் ஆண்டில் தொடங்கும் என்றும், 45 ஆண்டுகளில் முதன்முறையாக விண்வெளிக்கு மனிதர்கள் சென்றுவிட்டு திரும்பும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்குள் இரண்டு பேரை முதன்முதலாக விண்வெளிக்கு சுற்றுலாவாக அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து   அமெரிக்காவின் பிரபல விண்வெளி நிலையமான நாசாவுடன் இணைந்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த  தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகும். இங்கு  நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்களுக்கு தேவையான விண்கலங்களை தயாரித்து வழங்கி வருகிறது.