ராமேஸ்வரம்

லங்கை கடற்படை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்கள் மற்றும் காலி பாட்டில்களை வீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் சுமார் 1500 பேர் நேற்று இரவு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.    அவர்கள் 300 படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்  பிடித்துக் கொண்டிருந்தனர்.    அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் கடலில் ரோந்து வந்தனர்.

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கி உள்ளனர்.   அத்துடன் தமிழக மீனவர்கள் கொண்டு சென்ற அனைத்து வலைகளை அறுத்தெறிந்துள்ளனர்.   மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

மீன் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இன்று காலை  தமிழக மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர்.    மீனவர்கள் தங்களின் படகு ஒன்றுக்கு சுமார் ரூ.10000 – ரூ.30000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர்