கொழும்பு:
லங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கூட்டத்தில் தங்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததாக கல்வி அமைச்சர் கூறினார்.

இதனிடையே, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. நிலையில், அது பெய்யான தகவல் என்றும், தற்போது அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அனைத்து இலாகாக்களில் இருந்தும் எனது ராஜினாமாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.