இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் ஆல்வி உத்தரவிட்டார். அடுத்த 90 நாளில் தேர்தல் நடத்தி புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரையில் பிரதமர் பதவியில் இம்ரான்கான் நீடிப்பார் என அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார்.