ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, 217 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

இலங்கையின் திரிமன்னே 55 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். சந்திமால் தன் பங்காக சேர்த்தது 44 ரன்கள். டி சில்வா 39 ரன்களுக்கு அவுட். நிஸான்கா 23 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். டிக் வெல்லா 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மொத்தம் 91.3 ஓவர்கள் ஆடிய இலங்கை அணி, 217 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போதைய நிலையில், 137 ரன்கள் பின்தங்கியுள்ளது அந்த அணி.

விண்டீஸ் தரப்பில் ஜோசப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்றபடி, ரோச், கேப்ரியல், ஹோல்டர், மேயர்ஸ் மற்றும் பிளாக்வுட் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.