பொதுநிகழ்ச்சியில் நடக்கும் உருவக்கேலியை எதிர்க்கும் ஸ்ரீப்ரியா….!

Must read

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மா.கா.பா தொகுத்து வழங்குகிறார்கள் .சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களை இவர்கள் தொடர்ந்து கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரீப்ரியா இப்படி உருவக்கேலி செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், ஒருவரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை. மா.கா.பா, பிரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை. நீங்கள் ஒருவரையொருவர் கேலி செய்து கொள்ளுங்கள். மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது. #உருவகேலியைஎதிர்போம்” என்று கூறியுள்ளார்.

நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன். இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்” என்று தன தொடர்பாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார் .

More articles

1 COMMENT

Latest article