கா மாரியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் என்ற ஊரில் அமைந்துள்ளது.

இந்த வலங்கைமான் மாரியம்மன் கோவில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலில் பக்தர்கள் அவர்களது வேண்டுதல் நிறைவேற பாடைகட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பம்சமாகும்.

மேலும் இக்கோயிலில் பேச்சியம்மன், இருளன், மதுரைவீரன், விநாயகர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமண தடை, பார்வை இழந்தவர்கள், அம்மை நோய் வந்தவர்கள் ஆகியோர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்து குணம் பெறுகின்றனர்.

வலங்கைமான் அருகில் உள்ள ஐயனார் கோயில் வழியாக ஒரு பிராமண தம்பதியரால் ஒரு பெண் குழந்தை விட்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை அந்த பகுதியில் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் எடுத்து வளர்த்தனர். அந்த குழந்தை அம்மை நோய் கண்டு உயிர் பிரிந்தது. அவர்கள் குழந்தையை அவர்கள் வீட்டு கொல்லைப்புறத்தில், கீற்றுக்கொட்டகை அமைத்து சமாதி வைத்தனர்.

சமாதிக்கு தினமும் விளக்கேற்றி வந்தனர், வீட்டில் சமைக்கும் உணவுப்பண்டங்களை தினமும் படைத்தனர், காலப்போக்கில் சமாதியை அனைவரும் வழிபடத்துவங்கினர். வேண்டியவர்களுக்கு வேண்டிய பலன் கிடைத்ததால் அந்த குழந்தையை சீதளாதேவி என்று பெயரிட்டு அம்மனாக வழிபட்டனர். சீதளாம் என்றால் குளிர்ச்சி என்று பொருள் அம்மை ஏற்பட்டு குளிர்ந்து போனதால் அந்த பெண் தெய்வம் சீதளாதேவி என்று அழைக்கப்படுகிறாள்.

தட்சனின் வேண்டுகோள்படி சக்திதேவி அவனது மகளாக பிறந்தாள். தட்சன் சிவபெருமானை வெறுத்தான். ஆனால் சக்தியோ சிவனையே திருமணம் செய்து கொண்டால். தட்சன் யாகம் செய்த போது சக்தி அதில் விழுந்து மீண்டும் இமயமலையில் அவதரித்தாள். சக்தி தேவியின் உருவம் நெருப்பில் குதித்ததால் சிதைந்து போயிற்று.

ஆவணி ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மற்ற ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.