சென்னை: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே – பிரதமர் மோடி இடையே UPI பரிவர்த்தனை, காங்கேசன் துறைமுகம் உள்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இலங்கை அதிபராக  பதவி ஏற்றபிறகு முதன்முறையாக அவர் வருகை தந்துள்ளார். அவரை, மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர். இலங்கை அதிபர்  ரணில் விக்ரமசிங்க டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளை சந்தித்தார். இதையடுத்து, இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இதையடுத்து, இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில், இரு நாட்டு பரஸ்பர உறவுகள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  மேலும்இ, இந்தியா இலங்கை இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் உயர்த்துவது, வலுப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாக  கூறப்படுகிறது.

இதையடுத்து,  UPI பரிவர்த்தனையை இலங்கையில் அனுமதிக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம், நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , “இந்தியாவின் தென் பகுதியில் இருந்து இலங்கைக்கு பல திட்ட பெட்ரோலியக் குழாய் அமைப்பதன் மூலம், இலங்கைக்கு மலிவு மற்றும் நம்பகமான ஆற்றல் வளங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடியும் நானும் நம்புகிறோம் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி பேசும்போது, பொருளாதார நெருக்கடியில் இலங்கையுடன் தோளோடு தோள் நின்றோம்”  என்றவர், “இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றார். மேலும்,”இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றும் கூறினார்.