கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக தலைமறைவாக உள்ள கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில், ராஜபக்சே குடும்பத்தில் அரசு பொறுப்பில் இருந்து விலக வேண்டும்  பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தீவிரமடைந்து,  கடந்த 9ந்தேதி போராட்டக்காரக்ரள  அதிபர் மாளிகைக்குள் புகுந்த நிலை யில், முன்னதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவ இருந்து வருகிறார். பிரதமர் ரணிலின் வீடும் தீ வைக்கப்பட்டது.  இதையடுத்து போராட்டத்தை ராணுவத்தினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே இன்று தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். அதைத்தொடர்ந்து,  அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம் செய்தாக கூறப்படுகிறது. ஆனால், அதிபர் இல்லாததால், அவர்களின் ராஜினாமா ஏற்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் ஏற்கனவே தமது இராஜினாமா கடிதங்களை அறிவித்துள்ள நிலையில்,  மற்ற அமைச்சர்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். நீதியமைச்சராக பணியாற்றிய விஜேதாச ராஜபக்ஷவின் கூற்றுப்படி, இலங்கை அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

சர்வகட்சி உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி உள்ளதாக கூறப்படுகிறது.