கொழும்பு:
லங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

1948 சுதந்திரத்துக்கு பிறகு முதல் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பேப்பர் தட்டுப்பாட்டால் இலங்கையில் காலவரையறையின்றி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

இலங்கை தேயிலை, ஆடை, சுற்றுலா வருமானங்களை தான் பிரதானமாக நம்பியுள்ளது. கொரோனா காலத்தில் வருமானம் முடங்கியது. கடன் அதிகரித்தது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள பள்ளிகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் இறுதித்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை பல லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர். இதனால் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வை எதிர்கொள்ள தயாராகி வந்தனர்.

இந்நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பேப்பர் தட்டுப்பாட்டை சமாளிப்பது இயலாத காரியமாக உள்ளது. இதனால் கல்வித்துறை செய்வதறியாது தவித்து வருகிறது. இந்நிலையில் தான் இலங்கையின் மேற்கு மாகாண கல்வித்துறை சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.