மும்பை

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் 15 ஆம் மெகா ஏலம் குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றைப் பதிந்துள்ளார்.

இந்த ஆண்டு அதாவது 2022-ம் ஆண்டுக்கான 15-வது ஐ.பி.எல். போட்டிகள் வரும் மார்ச் மாதம் துவங்கி, மே மாதம் வரை இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  ஐ.பி.எல். போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.  ஒவ்வொரு அணியும் பிசிசிஐயின் விதிமுறைப்படி, ஏற்கெனவே ஒவ்வொரு அணியும் 4 வீரர்களைத் தக்க வைத்துக்கொண்டு மீதமுள்ள வீரர்களை விடுவித்துள்ளது.

தற்போது பிசிசிஐ, மெகா ஏலத்தில் பங்கு பெறும் 590 வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 8 அணிகள் இருந்த நிலையில்,தற்போது லக்னோ (சூப்பர் ஜெயண்ட்ஸ்) மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதம்ச்ச்; இந்த ஆண்டு மெகா ஏலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது

சுமார் 38 வயதான இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மெகா ஏலத்தின் 590 வீரர்களில் ரூ. 50 லட்சம் அடிப்படை விலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ஸ்ரீசாந்த்க்கு, சூதாட்ட புகார் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

முதலில் வாழ்நாள் முழுவதும் நீட்டிக்கப்பட்ட தடை பின்னர், 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் சையது முஷ்டக் அலி டிராபியில் கேரள அணிக்காக ஸ்ரீசாந்த் விளையாடினார். மேலும் விஜய் ஹசாரே போட்டியிலும் பங்கேற்றார்.  இந்த தடைக்குப் பிறகு கடந்த ஆண்டு ஸ்ரீசாந்த், ஐ.பி.எல். ஏலத்தில் பதிவு செய்திருந்தும் அவரது பெயர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்த ஆண்டின் .பி.எல்மெகா ஏலத்தின் இறுதிப் பட்டியலில் ஸ்ரீசாந்த் பெயர் இடம் பெற்றுள்ளது.இது குறித்து  டிவிட்டர் பக்கத்தில் ஸ்ரீசாந்த்,

“எல்லோரையும் நேசிக்கிறேன்.. உங்கள் அனைவருக்கும் நன்றி சொன்னால் அது போதுமானதாக இருக்காது. உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து இறுதி ஏலத்திற்கான உங்கள் பிரார்த்தனையில் என்னை வைத்துக்கொள்ளுங்கள். ஓம் நம சிவாய” 

எனப் பதிவிட்டுள்ளார்.