சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை பணிகளை தொடங்கி வைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த துறைகளுக்கு தனி அமைச்சர்கள் உள்ள நிலையில், விளையாட்டு துறை அமைச்சர் இவற்றை திறந்தும் 13 புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது.  இதில் பல மூத்த அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தாலும், முதல்வரின் மகனான அமைச்சர் உதயநிதிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் துணைமுதல்வராக பதவி உயர்வு பெறவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,  நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூபாய் 11.98 கோடி மதிப்பிலான முடிவுற்ற 13 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப் பணிகள் திறக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, ரூபாய் 152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறை  மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக மூத்த அமைச்சர் கே.என்.நேரு உள்ள நிலையில், அவருக்கு பதிலாக விளையாட்டு துறையைச் சேர்ந்த அமைச்சர் உதயிநிதி மூலம் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பது மூத்த அமைச்சர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.