மார்வெல் படங்களில் மீண்டும் ’ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரம் இடம்பெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரத்தின் உரிமை அப்படத்தை தயாரித்த சோனி நிறுவனத்திடம் இருந்து வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஸ்பைடர்மேன் படங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் கேட்கும் மார்வெல் நிறுவனத்தின் கோரிக்கையை சோனி நிறுவனம் ஏற்கவில்லை. மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் சோனி – மார்வெல் கூட்டு தயாரிப்பு உருவாகும் ஸ்பைடர்மேன் படங்களில் இனி தலையிடுவதில்லை என்று விலகினார்.
சமூக வலைதளங்களில் #savespiderman என்ற ஹாஷ்டேகுகள் மூலம் உலக அளவில் இந்த பிரச்சினையை டிரென்ட் செய்தனர் ஸ்பைடமேன் ரசிகர்கள். இனி மார்வெல் படங்களில் ஸ்பைடர்மேனை பார்க்க முடியாது என்ற கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இது கூட நியூஸ்