மார்வல் ஸ்டுடியோஸின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் கெவின் ஃபைஜி, டிஸ்னி நிறுவனத்துக்காக புதிய ஸ்டார் வார்ஸ் படத்தை உருவாக்கவுள்ளார்.

2009-ல் மார்வல் நிறுவனத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கியது.2012ல் லூகாஸ் ஃபிலிம் நிறுவனத்தை 4.05 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. டிஸ்னி தலைமையில் மார்வலும், லூகாஸ் ஃபிலிமும் சேர்ந்தே இயங்கி வருகின்றன.

லூகாஸ்ஃபிலிம் தலைவர் கேத்லீன் கென்னடியுடன் இணைந்து ஃபைஜி, புதிய ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை உருவாக்க உள்ளார்.