சென்னையில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை காரணமாக நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஹெல்மெட், சீட் பெல்ட், ஸ்டாப் லைன் வயலேஷன் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதன் அடுத்தகட்டமாக சென்னை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இலகுரக மோட்டார் வாகனங்கள்: மணிக்கு 60 கிமீ
கனரக மோட்டார் வாகனங்கள்: மணிக்கு 50 கிமீ
இரு சக்கர வாகனங்கள்: மணிக்கு 50 கிமீ
ஆட்டோ ரிக்‌ஷாக்கள்: மணிக்கு 40 கிமீ வேகம் மற்றும்

குடியிருப்பு பகுதியில் அனைத்து வாகன வகைகளும் அதிகபட்சம் மணிக்கு 30 கி.மீ. வேகம் மட்டுமே செல்லவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. வேகக்கட்டுப்பாட்டு விதியை மீறுவோருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படுகிறது.

தடைகளை தாண்டி தொடர்ந்து வேகமாக இயக்கி சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 3000 அபராதம் விதிக்கவும் அல்லது அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.