சென்னை

நாளை தமிழகத்தின்  10 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழையும் பெய்து வருகிறது. வானிலை மையம் சார்பில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளையும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 10 மாவட்டங்களில்  நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.