துரை

ரும் 28 ஆம் தேதி அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.   அன்று நீர் நிலைகளில் மறைந்த முன்னோருக்குத் திதிகள், தர்ப்பணம் ஆகியவை வழங்கப்படுகிறது.    இதனால் ராமேஸ்வரத்தில் அன்று ஏராளமானோர் வந்து திதி மற்றும் தர்ப்பணம் அளிப்பது வழக்கமாக உள்ளது.

இந்த வருடம் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஏராளமானோர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது.  எனவே வரும் 28 ஆம் தேதி அன்று மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிற[[இ ரயில்கள் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வேயின் மதுரைக்கோட்டம் அரிவித்துள்ளது.

அந்த ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக (வ.எண்.06907) மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு காலை 9.15 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.

பிறகு மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (வ.எண்.06908) ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் கீழ் மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.