டெல்லி: லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 2ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பல்வேறு ஊர்களில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர்.
இந் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

ஆனால், ஒவ்வொருவரும் முறையான கொரோனா பரிசோதனைக்கு பின்னரே ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து வேறு ஒரு மாநிலத்துக்கு உள்நுழைபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.