உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு – விஜயகாந்த் வேண்டுகோள்

Must read

சென்னை: 
ரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு அமைக்க வேண்டும் என்று  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டு நன்னாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ. புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் பட்டாசு வெடி விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக சார்பில் ஏற்கனவே பலமுறை அறிக்கை அளித்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது.
இனிவரும் காலங்களில் பட்டாக விபத்துகளைத் தடுக்க, உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், தமிழக அரசுத் துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து பட்டாலிஆலைகளை கண்காணிக்க வேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article