சென்னை

சென்னை சென்டிரல் – நாகர்கோவில் இடையே ஹோலி பண்டிகையை முன்னிட்டு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

நாகர்கோவிலில் இருந்து, வரும் 10, 24 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண். 06019) மறுநாள் மதியம் 12.10 மணிக்குச் சென்னை சென்டிரல் வந்தடையும். 

மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து, வரும் 11, 25 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மதியம் 3.10 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06020) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 

நாகர்கோவிலில் இருந்து, வரும் 17, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06021) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். 

மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து, வரும் 18 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மதியம் 3.10 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06022) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.