சென்னை:

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய்,  ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

மேலும்,டைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி 1000 மற்றும் கூடுதலாக 1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும்,

கட்ட தொழிலாளர்கள், ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

முதல்வரின் போனஸ் அறிவிப்பு மருத்துவத்துறை ஊழியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டுவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…