சென்னை:
திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சபாநாயகர் அறிவித்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற அமளி காரணமாக திமுக உறுப்பினர்கள் 88 பேர் ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களை சபைக்காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
இன்று காலை வழக்கம்போல் சபை கூடியதும் திமுக உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, சபை நடவடிக்கையில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி, சட்ட சபையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தி.மு.க உறுப்பினர்கள் மீதான சஸ்பென்ட் உத்தரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய முடியாது என சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.