ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி: ஜெயலலிதாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

Must read

சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ஜெயலலிதா பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  அந்த தொகுதி வாக்காளரான வழக்கறிஞர் லாவண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
jaya-hightouc
இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை  விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article