ல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி ‘கின்னஸ்’ சாதனை படைத்தவர் எஸ்.பி.பி. இந்த பாடும் நிலாவின் சாதனைகளில் மேலும் ஒன்று அதிகரிக்கிறது.
ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் இருக்கிறது அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை.
இந்த பகுதியில் அமைந்துள்ள ஆடிட்டோரியத்தில் வரும் ஆறாம் தேதி இவரது இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது!
ஒரே நேரத்தில் 6000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான ஆடிட்டோரியம் இது.
%e0%ae%9arussiya
இதற்கு முன் இங்கு எஸ்.எஸ். சுப்புலட்சுமியின் இசைக்கச்சேரி நடந்ததிருக்கிறது. அதன் பிறகு ஒரு இந்திய பிரபலத்தின் நிழ்ச்சி நடப்பது இப்போதுதான்.
ரஷ்யாவில் வாழும் இந்திய மக்களின் தீபாவளிக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் “படவா’ கோபி மற்றும் அவரது நண்பரான விஜயகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன், எஸ்.பி.பி சரண், எஸ்.பி.ஷைலஜா, மற்றும் நடிகை மாளவிகா ஆகியோரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பாடல்களுடன் ரஷ்யமொழி பாடல்களும் பாடி அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கிறார் எஸ்.பி.பி.
இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் சம்மி கோத்வானி தலைமையில் மாஸ்கோ சாரா குழு சேகர் மூலம் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு “from Russia with Love” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவில் வாழும் இந்தியர்கள் மட்டுமின்றி, அந்நாட்டவர்களும் ஆவலுடன் இந் நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!
sbo