அமெரிக்கா: 'போதை ஊசி' போட்டு குழந்தையை தூங்க வைத்த கொடூரம்…!

Must read

வாஷிங்டன்,
பெற்ற குழந்தையை தூங்க வைக்க, போதை ஊசி போட்டு தூங்க வைத்திருக்கிறார் ஒரு கொடூர தாய்.
நமது நாட்டில்  குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுவார்கள். ஆனால், அமெரிக்காவில்,  ஒரு தாயே போதை ஊசி போட்டு , தன் குழந்தைகளை  தூங்க வைத்த அவலம்  நிகழ்ந்துள்ளது.
us_momவாஷிங்டனை சேர்ந்த அஷ்லி ஹட் என்ற பெண்மனி,  தூங்காமல் குறும்பு செய்த தனது மூன்று குழந்தை களுக்கும் ஹெராயின் ஊசியை தூக்கம் கொடுக்கும் ஜூஸ் என கூறி கொடுத்துள்ளார்.
இதுபற்றி பக்கத்து வீட்டார் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் வீட்டுக்கு வந்து அவரை கைது செய்தனர்.
அப்போது,  போலீசாரிடம் அந்த பெண்ணின் 6 வயது மகன் ஆஷ்லின் கூறியதாவது,
தன் தாய், எங்களது கழுத்தை நெறித்து, எங்களுக்கு போதை ஊசி போடுவார் எனக் கூறினார். இந்த தகவல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.  உண்மையில் அவர் பெற்ற தாய் தானா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட அஷ்லி ஹட்டுக்கு 2, 4 மற்றும் 6 வயது உடைய 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article