சென்னை: அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  தனது ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது,  தமிழ்நாட்டு மக்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றார். கடந்த 27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாளை சென்னை திரும்புகிறார். . ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

இதுதொடர்பான   எக்ஸ் தளத்தில்  முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,  வெற்றிகரமான எனது ஸ்பெயின் நாட்டு பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். கெஸ்டாம்ப், டால்கோ, எடிபன் நிறுவனங்களிடம் தமிழ்நாட்டில் |கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்பு பற்றி எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான மேப்ட்ரீயுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டு மக்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.