சென்னை: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை தருகின்றனர். அதைத் தொடர்ந்து 2 நாள் சென்னையில் ஆலோசனை நடத்துகினற்னர்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற  உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதையொட்டி, மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழக தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.