மாஸ்கோ
கடந்த 1972 ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய வடிவமைத்து ஏவப்பட்ட விண்கலம் பூமிக்கு திரும்பி வந்துள்ளது
சுமார் 53 வருடங்களுக்கு முன்னாடி, 1972-ல், சோவியத் யூனியன் ஒரு விண்கலத்தை வெள்ளி கிரகத்துக்கு அனுப்பிய நிலையில, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விண்கலம் இப்போது பூமியோட வளிமண்டலத்துல மறுபடியும் நுழைந்து பூமியை அடைந்துள்ளது.
1972-ம் ஆண்டு மார்ச் 31-ல், அப்போதைய சோவியத் யூனியன் கோஸ்மோ 482 என்னும் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலத்தின் முக்கிய நோக்கம், வெள்ளியோட மேற்பரப்பு, வளிமண்டலம், மற்றும் சுற்றுச்சூழல் பற்றி தரவுகளைச் சேகரிப்பதாகும், ஆனால் இந்த விண்கலம் வெள்ளி கிரகத்தை அடையாமல் பூமியின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து சுற்றி வந்தது/
தற்போது இந்த விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து மீண்டும் பூமிக்கு திரும்பி உள்ளதாக ரஷ்ய விண்வெளி நிருவனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி நிலையம் ஆகியவை தெரிவித்துள்ளன, ஆனால் இந்த விண்கலம் பூமியில் எங்கு இறங்கியது என்பதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் ஏதும் விளக்கம் அளிக்கப்படவில்லை.