சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, புதிதாகக் கட்டப்படும் கட்டட அடிக்கல் நாட்டு விழா, சென்னையில் தொடங்கியது.

அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட 3000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை சென்னை, தியாகராய நகர், அபிபுல்லா சாலையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.

ரூ.26 கோடி செலவில், நடிகர் சங்கத்துக்கு நான்கு மாடிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாகவும்,  இந்தப்  புதிய கட்டடத்தில், நடிப்புக்கான பயிற்சிக் கூடம், ஜிம், தியேட்டர் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே விழாவுக்கு வந்தவர்கள் ஆளுக்கு ஒரு செங்கல்லாக எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர்.

முற்பகல் சுமார் 11 மணி அளவில் நடிகர் கமலஹாசன் வந்து செங்கல்லை எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து மலேசிய பிரதமருடனான சந்திப்பு முடிந்தவுடன்  நடிகர் ரஜினிகாந்த் சுமார் 12 மணி அளவில் விழாவில் கலந்துகொண்டு செங்கல் எடுத்து வைத்தார்.