ராகுல் காந்தி தென்ஆப்ரிக்கா வர அதிபர் ரமாபோசா அழைப்பு

Must read

டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தங்கள் நாட்டு வருமாறு தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசா அழைப்பு விடுத்துள்ளார்.

 

கடந்த சனிக்கிழமை நடந்த குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசா கலந்துக் கொண்டார். அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி மற்றும் சிரில் ஆகிய இருவரும் பல விவகாரங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த சர்மா, “தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர் ராகுல் காந்தியை தென் ஆப்ரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். ராகுலின் தென் ஆப்ரிக்க பயணம் விரைவில் நடக்கும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்துக் கொண்டு இருக்கின்றன. தென் ஆப்ரிக்க சுதந்திரப் போரில் காங்கிரஸ் கட்சி உதவி செய்ததை அதிபர் மிகவும் பாராட்டி உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்க சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article