உடலில் புழுக்கள்!: குடிகார தந்தையால் நரகத்தை அனுபவித்த சிறுமிகள்!

Must read

டில்லி:
குடிகாரத் தந்தையால் இருட்டறைக்குள் வைத்து பூட்டப்பட்ட இரு குழந்தைகள், உடலில் புழுக்களோடு மூன்று  நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி சமயபூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கும் பப்லு (35), தன்னுடைய மனைவி ரோஷி மற்றும் இரு குழந்தைகள் அல்கா (8), ஜோதி (3) ஆகியோருடன் வசித்து வந்தார்.
பப்லு, குடிக்கு அடிமையானவர். மனைவி ரோஷியை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். இதையடுத்து  இரு மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ரோஷி சென்றுவிட்டார்.
இந்த நிலையில், எந்த வேலைக்கும் செல்லாத பப்லு தன்னுடை இரு குழந்தைகளையும் ஒரு இருட்டறையில் அடைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார்.
Untitled
இந்த நிலையில் நேற்று,  அந்த வீட்டிலிருந்து ஒருவித துர்நாற்றம் வருவதாக பக்கத்து வீட்டினர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வீட்டுக் கதவை உடைத்து உள்ளறைக்குள் நுழைந்து பார்த்தனர் காவல்துறையினர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி, அதிர்ச்சியின் உச்சத்துக்கே அவர்களைக் கொண்டு சென்றுவிட்டது.
எட்டு மற்றும் மூன்று வயது பெண்குழந்தைகள் இருவரும் உயிர் போகும் நிலையில் கிடந்தனர். அவர்கள் உடலில் புழுக்கள் தோன்றயிருந்தன.
நாட்கணக்கில் உணவு, நீர், வெளிச்சம் இன்றி குடிகாரத்தந்தையால் விடப்பட்டதால்  இந்த கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள் அந்த குழந்தைகள்.
 
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article