சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைக்காக பல்நோக்கு வசதி கொண்ட வார்டு விரைவில் அமைய உள்ளது.

இந்த வார்டில் மொத்தம் 70 படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என்றும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த வார்டை திறந்து வைப்பார் என்று மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:

பக்கவாதம், மாரடைப்பு மற்றும் விபத்துகளின் போது அவசர வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படும். நோயாளிகளின் வருகைக்காகவே ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு என்று பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்படும்.

மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சீராக நுழைவதையும் வெளியேறுவதையும் உறுதி செய்ய போக்குவரத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். மற்ற மருத்துவமனைகளில், வாகனங்கள் சீராக நுழைந்து வெளியேறலாம், ஆனால் இங்கே வட சென்னையில், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.