பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் விரைவில் மதமாற்றத் தடை சட்டம் அமல் செய்யப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.   இந்த கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கூலிகட்டி சேகர், “அதிக அளவில் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதில் திருமணத்துக்காக பலர் மதம் மாறுகின்றனர்.  இதை அரசு உடனடியாக தடை சென்ன வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா, “விரைவில் கர்நாடகாவில் மதமாற்றத்தைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.   கர்நாடகாவில் குறிப்பாகக் கிறித்துவர்கள் தங்கள் மக்கள் தொகையை அதிகரிக்க அதிக அளவில் மதமாற்றம் செய்து வருகின்றனர்.  என் தொகுதியில்  தலித் மக்களும் பழங்குடியினரும் பெருமளவில் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எனது தாயாரே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார்.அவரை கிறிஸ்தவர் மூளைச் சலவை செய்ததால் இப்போது எத்தகைய அணிகலனையும் அவர் அணிவதில்லை. நெற்றியில் பொட்டு கூட வைப்பதில்லை. தன் செல்போன் ரிங் டோனாக கிறிஸ்தவ பாடலையே வைத்திருக்கிறார்” என்றார்.

இதற்குப் பேரவைத் தலைவர் வெளிமாநில சட்ட பிரிவுகளை ஆய்வு செய்த பிறகு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என  ஆலோசனை அளித்துள்ளார்.